அதி வேக இணையதள சேவையை அறிமுகப்படுத்துகிறது கூகுள்
கூகுள் நிறுவனம் அதி வேகத்தில் செயல்படும் புதிய இணையதள சேவையை அறிமுகம்
செய்கிறது . இந்த புதிய இணையதள சேவையின் வேகம் குறித்த விஷயங்களை சோதனை
செய்து பார்க்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் நகர குடியிருப்பு
பகுதிகளில் வரும் செப்டம்பர் மாதம் இந்த வசதி வழங்கப்படும். மற்ற
இன்டர்நெட் வசதிகளை விடவும், கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய கூகுள் ஃபைபர்
இன்டர்நெட் சேவை 100 மடங்கு வேகம் கொண்டதாக இருக்கும் என்று
கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் இந்த இணையதள சேவையின் வேகம் அல்ட்ரா-ஹை
ஸ்பீட் என்று சொல்லப்படுகிறது. இதனால் நிச்சயம் பல மடங்கு வேகத்தில், இந்த
இன்டர்நெட் சேவை இயங்கும் என்று கூறலாம்.

No comments:
Post a Comment